hussain

நல்லதொரு தலைவர் எந்நேரமும் அவர்களின் ஊழியர்களுக்கு, முன்மொழிவது அவர்கள் சிந்திப்பதை விடவும் கூடிய ஆற்றல்கள் அவர்களிடம் உள்ளதென்று.  அவர்கள் சிந்திப்பதை விடவும் நன்றாக கடமை புரிவார்கள்.”
– சார்ளஸ் அர்வின் வில்சன்-

 

நல்ல திறமையும் மற்றும் வெற்றியும் உடைய நபராக அறிமுகப்படுத்தக் கூடிய திரு.வீ.ஹுசைன் அவர்கள் தனக்கு வழங்கப்படுகின்ற எல்லாக் கடமைகளையும் மிகவும் வினைத்திறனுடனும் மற்றும் நம்பிக்கையுடனும் மேற்கொள்கின்ற ஒர் அரிய நற்பண்புள்ள அரச ஊழியர் ஆவர்.
1957ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதியில் பிறந்த திரு.வெல்லத்தம்பி ஹூசைன் பேராதனை பல்கலைக்கழகத்தின் வர்த்தகப் பட்டதாரியாவர். இந்தியாவின் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் தொடர்பாக முதுமானிப் பட்டப்படிப்பையும் மேற்கொண்ட அவர் தொழில்ரீதியான சகல தகுதிகளும் கொண்டவராகும்.

1979ம் ஆண்டில் இலிகிதராக கண்டி தேசிய சேமிப்பு வங்கியில் தனது தொழில் பயணத்தை ஆரம்பித்த திரு.வீ.ஹூசைன் அவர்கள், தேசிய சேமிப்பு வங்கியினால் காலத்திற்குக் காலம் அறிமுகப்படுத்தப்படுகின்ற கடன் கொடுப்பனவு, சேமிப்பிற்காக அத்தாட்சிப்பத்திரம் விநியோகித்தல், காப்புறுதித் திட்டங்கள் மற்றும் ஏனைய சேமிப்பு போன்ற பல நடவடிக்கைகளையும் மேற்பார்வை செய்துள்ளார். 6 வருட காலங்கள் தேசிய சேமிப்பு வங்கியில் சேவை புரிந்ததன் பின்னர் 1985ம் ஆண்டில் பெராமவுன்டன் கப்பல் கம்பனிக்கு சேவை வழங்கிய அவர் அங்கு எதிர்காலத்தில் கொள்கைகளைத் திட்டமிடல், மற்றும் நிதி நடவடிக்கைகளுக்கு உதவி வழங்கல், செயல்திறன்களை நிர்வகித்தல் போன்ற பல நடவடிக்கைகளும் அவரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு பல வியாபார வியூகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதிலும் ஊழியர்களை உற்சாகப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளிலும் தனது சேவையினை அக்கறையுடன் வழங்கியுள்ளார்.

அவர் புனர்வாழ்வு அதிகாரசபையுடன் ஒன்றிணைந்த 1998 ஜனவரி மாதம் 01ம் திகதியிலிருந்து உதவிப் பணிப்பாளர்களில் ஒருவரானார். அங்கு அவர் பல்வேறு நடவடிக்கைகளில் இணைக்கப்பட்டதோடு சாதாரண நிர்வாகம், அரச ஊழியர்களுக்காக நட்டஈடு வழங்கல், கடும் பாதிப்புற்றோருக்காக நட்டஈடு வழங்கல், தேர்தல் வன்செயல் உள்ளடங்கிய பல்வேறு நடவடிக்கைகளுக்காக 20 ஆண்டு நீண்ட கால சேவையில் தாராள மனதுடன் புனர்வாழ்வு அதிகாரசபைக்கு வழங்கியுள்ளார். ஓவ்வொரு நலன்புரி விடயங்களிலும் தலைமை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட திரு.வீ.ஹூசைன் அவர்கள் தனக்கு வழங்கப்படுகின்ற எல்லாப் பொறுப்புக்களையும் மிகவும் திறமையாக மேற்கொண்ட மிகச் சிறந்த அரச ஊழியராக இனங்காண முடியும்.

இது போன்று புனர்வாழ்வு அதிகாரசபைக்காக மிகப் பெரிய கடமையை மேற்கொண்ட திரு.வீ.ஹூசைன் அவர்கள் 2017 ஒக்டோபர் 10 ம் திகதியுடன் ஒய்வூதியம் பெறவுள்ளதோடு, அவர் எமது அதிகாரசபைக்கு வழங்கிய சிறந்த சேவையினை என்றும் மதிப்பளிக்கப்பட வேண்டிய ஒன்றென இங்கு மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றோம்.

புனர்வாழ்வு அதிகாரசபையில் சில காலங்கள் சேவை புரிந்து தற்போது ஒய்வூதியம் பெற்றும் மற்றும் வேறு சேவை இடங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள ஆறு உத்தியோகத்தர்களுக்காகவும் சேவைப் பாராட்டு விழாவொன்று 2017.10.26ம் திகதி பி.ப.1.30 மணியிலிருந்து பி.ப.4.30 வரை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  புனர்வாழ்வு அதிகாரசபையின் நலன்புரிச் சங்கத்தினால் நிறுவனத்தின் சகல உத்தியோகத்தர்களினதும் அனுசரனையுடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இவ்வைபவத்தில் கீழ்க் குறிப்பிட்டுள்ள உத்தியோகத்தர்களின் சேவைகள் கௌரவிக்கப்படும்.

  • திரு. வீ. ஹூசைன் (பிரதிப் பணிப்பாளர்)
  • திரு. ஈ.ஏ. சமரசிங்க (முன்னாள் தலைவர்)
  • திரு. டி.கே. ஜினதாஸ (முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர்)
  • திரு. எஸ். கணேஷதாஸ் (புனர்வாழ்வு உதவியாளர்)
  • திருமதி. உர்ஷலா நவரத்ன (மொழி பெயர்ப்பாளர்)
  • திருமதி. கயனி ராஜநாயக்க (புனர்வாழ்வு உதவியாளர்)

2017.10.21ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் வவுனியாவின் சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் (Siva Pirahasa Maha Vidyalaya) இடம்பெற்ற ஜனாதிபதி உத்தியோகபூர்வ நடமாடும் சேவையில், யுத்த நிலைமைகள் காரணமாக இறந்த நபர்கள் 09 பேருக்காகவும் மற்றும் காயமுற்ற ஒருவருக்காகவும் ரூபா 950,000.00 நட்டஈடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

மேலும் அழிவடைந்த ஒன்பது வணக்கஸ்தலங்களை புனரமைப்பதற்காக ரூபா மில்லியன் 1.6 நட்டஈடாக இங்கு வழங்கப்பட்டுள்ளன.

2012.11.09ம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட அமைதியின்மை நிலமைகள் காரணமாக இறந்த மற்றும் காயமுற்றவர்களுக்காக காசோலை வழங்கும் வைபவம் 2017.10.25ம் திகதி மு.ப.11.00 மணிக்கு கௌரவ சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்களின் தலைமையின் கீழ் அமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

இங்கு இறந்தவர்கள் 04 பேருக்காகவும் காயமுற்ற இருவருக்காகவும் ரூபா மில்லியன் 09 காசோலைகள் வழங்கவுள்ளன.

அதன் பிரகாரம் இதுவரை புனர்வாழ்வு அதிகாரசபை மேற்படி சம்பவத்தில் இறந்த 10 பேருக்காகவும் 05 காயமுற்றவர்களுக்காகவும் ரூபா மில்லியன் 22.5 நட்டஈடாக கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளன.